தலைப்புச்செய்திகள்

கிரேட்டர் நொய்டாவில் அதிர்ச்சி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி- உணவு விஷமாகியிருக்கலாம் என சந்தேகம்!

நேற்று இரவன்று ஒட்டுமொத்த குடும்பத்தினரும் வழக்கம்போல் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டுவிட்டுத் தூங்கச் சென்றுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் நேற்று இரவு நூடுல்ஸ் மற்றும் தேநீர் அருந்தியதே இந்த உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரபுபுரா காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமப் பகுதியில் வசித்து வந்த இந்தத் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரே அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.மரணமடைந்தவர்கள் மகேஷ் (37), மனைவி லலிதா (35), அவர்களது லட்டு (11), மிஷ்டி (7), சக்ஷத் (3) என்ற குழந்தைகள் என்ற அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று இரவன்று ஒட்டுமொத்த குடும்பத்தினரும் வழக்கம்போல் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டுவிட்டுத் தூங்கச் சென்றுள்ளனர். ஆனால், இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததாலும், எங்கு வெளியே வராததாலும் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அவர்கள் இறந்து கிடந்த படுக்கையறையையும், சமையலறையையும் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் காவல்துறையும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் வீட்டில் எஞ்சியிருந்த உணவுப் பொருட்களின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உணவு விஷமாகி இந்த உயிரிழப்பு நேரிட்டிருக்கலாமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உறவினர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. உடற்கூராய்வு மற்றும் தடயவியல் முடிவுகள் வந்த பிறகே முழுமையான உண்மை தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT