தலைப்புச்செய்திகள்

75-வது மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் பியூர்ட்டோ ரிக்கோ அழகி ஜெனிஃபர் பாரெட்டோ!

தனது சமூகப் பணிகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் இன்னும் விரிவுபடுத்த மிஸ் யுனிவர்ஸ் மேடையைப் பயன்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சான் ஜுவானில் உள்ள ஜோஸ் மிகுவல் அக்ரெலாட் கொலிசியம் அரங்கில் நடைபெற்ற 75-வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில், பியூர்ட்டோ ரிக்கோவின் பிரதிநிதியான 27 வயது ஜெனிஃபர் பாரெட்டோ மகுடம் சூடினார்.

சான் ஜுவானில் நடைபெற்ற 75-வது மிஸ் யுனிவர்ஸ் இறுதிப் போட்டி நவம்பர் 24 அன்று சான் ஜுவானில் உள்ள ஜோஸ் மிகுவல் அக்ரெலாட் கொலிசியம் அரங்கில் நடைபெற்ற 75-வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில், பியூர்ட்டோ ரிக்கோவின் பிரதிநிதியான 27 வயது ஜெனிஃபர் பாரெட்டோ மகுடம் சூடினார். உலகம் முழுவதிலுமிருந்து பங்கேற்ற 115 போட்டியாளர்களைக் கடந்து, இறுதி ஐந்து இடங்களுக்குள் முன்னேறி அவர் இந்த வெற்றியைப் பெற்றார். டொமினிகன் குடியரசின் மெலிசா நூனெஸ் முதல் ரன்னர்-அப் ஆனார்.

சமூகப் பணி

சான் செபாஸ்டியன் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜெனிஃபர் பாரெட்டோ, கடந்த ஜூன் மாதம் மிஸ் யுனிவர்ஸ் பியூர்ட்டோ ரிக்கோ 2026 பட்டத்தை வென்றார். பிப்ரவரி 2026-ல் தான் அவர் அழகிப் போட்டி மேடையில் அறிமுகமானார்; ஏழு வயது மகள் பெனிலோப் உடன் திருமணமான குடும்பப் பின்னணியைக் கொண்டவர். உளவியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களையும், சமூகப் பணியில் முதுகலைப் பட்டத்தையும் பெற்ற இவர், தடுப்பு மற்றும் சமூக நலப் பணிகளில் அனுபவம் கொண்டவர்.

2021-ல் டெக்சாஸில் உள்ள ஃபோர்ட் காவஸோஸில் அமெரிக்க ராணுவத்தின் குடும்ப வக்காலத்து திட்டத்தின் கீழ் கல்வியாளராகவும் நெருக்கடி கால பதிலளிப்பாளராகவும் பணியாற்றத் தொடங்கினார். குடும்ப வன்முறை மற்றும் குழந்தை துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்ததுடன், கார்ல் ஆர் டார்னால் ராணுவ மருத்துவ மையத்திலும் தன்னார்வத் தொண்டு செய்து தடுப்பு நிபுணராகவும் பணியாற்றினார். தனது சமூகப் பணிகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் இன்னும் விரிவுபடுத்த மிஸ் யுனிவர்ஸ் மேடையைப் பயன்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு

மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் 75-வது ஆண்டு விழாவை பியூர்ட்டோ ரிக்கோ நடத்திய நிலையில், சொந்த மண்ணில் கிடைத்த இந்த வெற்றி அப்பகுதிக்கு ஆறாவது மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்பு 1970-ல் மரிசோல் மலகரெட், 1985-ல் டெபோரா கார்த்தி-டியூ, 1993-ல் தயானாரா டோரெஸ், 2001-ல் டெனிஸ் குயினோனெஸ், 2006-ல் சுலெய்கா ரிவேரா ஆகியோர் பியூர்ட்டோ ரிக்கோவுக்காக பட்டம் வென்றிருந்தனர். 2006-க்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து ஜெனிஃபர் பாரெட்டோ மூலம் மீண்டும் அந்த கிரீடம் பியூர்ட்டோ ரிக்கோவுக்குத் திரும்பியுள்ளது.

SCROLL FOR NEXT