டிசம்பர் 16 நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு.. வங்கதேசத்தில் வெடித்த கலவரம்

நாட்டின் பல பகுதிகளில் வன்முறை, தாக்குதல்கள் மற்றும் நாசவேலை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
ஷேக் ஹசீனா
ஷேக் ஹசீனா
Published on: 
Summary

டிசம்பர் 16 வங்கதேசம் திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவித்த நிலையில் அங்கு கலவரம் வெடித்துள்ளது.

2024 மாணவர் போராட்டத்திற்கு பிறகு இந்தியாவுக்கு தப்பி வந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அடுத்த மாதம் 16 ஆம் தேதி வங்கதேசம் திரும்புவதாக அறிவித்துள்ளார்.

அது போரில் பாகிஸ்தான் வீழ்த்ததை கொண்டாடும் வெற்றி தினமாகும்.

அவரின் வருகைககு முன் அவருடைய அவாமி லீக் கட்சியினர் வங்கதேசத்தில் போராட்டம் நடத்தி வரும் சூழலில் பல இடங்களில் கலவரம் வெடித்துள்ளது.

போராட்டம்

இதனால் வங்கதேச அரசியலிலும் சட்டம் ஒழுங்கிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அவாமி லீக், நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய முழு முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.

மேலும், அக்கட்சி அரசிடம் எட்டு அம்சக் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் வன்முறை, தாக்குதல்கள் மற்றும் நாசவேலை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

ஷேக் ஹசீனாவின் சொந்த மாவட்டமான கோபால்கஞ்சில், செவ்வாயன்று அவரது கட்சியான அவாமி லீக்கின் தொண்டர்கள் தாக்கப்பட்டனர்.

நேற்று பல இடங்களில் தீப்பந்த ஊர்வலங்கள் நடைபெற்ற நிலையில், இன்று முதல் போராட்டங்களை தீவிரப்படுத்தப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

அவாமி லீக்கின் 8 கோரிக்கைகள்

அவாமி லீக் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டு, அக்கட்சி மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கப்பட வேண்டும்.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், அவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்பட வேண்டும்.

நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

மின்சாரம், எரிவாயு, தண்ணீர், எரிபொருள், உரங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும்.

மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, வேலையற்ற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

குடிமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். கொலை, பாலியல் வன்கொடுமை, மிரட்டிப் பணம் பறித்தல், கொள்ளை போன்ற சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும்.

ராணுவ, குடிமைப் பணி அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான பொய் வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும். கருத்துச் சுதந்திரமும் பத்திரிகை சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் மீண்டும் கைது செய்யப்பட வேண்டும் என்பன அவர்களில் கோரிக்கைகளாக உள்ளது.

X