நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் மோசமான பங்களிப்பின் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ள கேப்டன்கள் அணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளின் கேப்டன்கள் மீது, அணி நிர்வாகம் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை நடந்துள்ள போட்டிகளில், அக்சார் படேல் 100 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். மேலும் ரிஷப் பண்டின் ஸ்ட்ரைக் ரேட் 138 ஆகவும், அஜின்கியா ரஹானே ஸ்ட்ரைக் ரேட் 133 ஆகவும் உள்ளது.
இந்த நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் அக்சார் படேல் கேப்டனாக அல்லாமல், வீரர்களாக களம் காண வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அஜின்கியா ரஹானேவிற்கு அடுத்த சீசனில் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.