1971ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்ற கழகத்தோடு ஒன்றாக இணைந்து பல தேர்தல்களை சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சி, தற்போது தமிழகத்தில் புதியதாக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உள்ள தமிழக வெற்றி கழகத்தோடு இணைந்துள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, “அவர்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதை தேர்வு செய்வது அவர்களின் உரிமை” என்று கூறியுள்ளார்.
“ நாங்கள் ஒன்றாக இணைந்து பல தேர்தல்களில் வென்றுள்ளோம். தற்போது நடைபெற்றுள்ள தேர்தலில் ஆட்சியை இழந்துள்ளோம். இதுகுறித்து வேறு எதுவும் சொல்வதற்கில்லை, இருந்தபோதிலும் நாங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்” .
கடந்த 2024ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட த.வெ.க, மதச்சார்பற்ற கட்சியாக தங்களை முன்னிலைப்படுத்து வரும் நிலையில், இதுகுறித்து பதிலளித்த அவர், “ஒரே சித்தாந்தத்தை கொண்ட கட்சிகள் தமிழகத்தில் இருப்பது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” .
மேலும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது குறித்து பேசிய அவர், “இதுகுறித்து இப்பொழுதே கூறுவது சரியாக இருக்காது, நாங்கள் அதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றோம்” , என்று பதிலளித்துள்ளார்.