தமிழக செய்திகள்

சென்னையில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் தீ விபத்து

வாகன ஓட்டிகள் கண் எரிச்சல் காரணமாக சிரமம் அடைந்துள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எரிபொருள் சேமிப்பு கிடங்கு அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.

எரிபொருள் சேமிப்பு கிடங்கு பகுதியில் கரும்புகை ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் கண் எரிச்சல் காரணமாக சிரமம் அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT