அமைச்சர் கீர்த்தனா கூறுகையில், பிரச்சனையை தீர்த்து வைத்த பிறகும் எதிர்க்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதில் அரசியல் புகுத்தப்படுகிறது என்று கூறினார்.
தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு எனும் பெயரில் நடைபெறும் இடையூறுகளால் அங்குள்ள பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, 6 மாதமாக ஆய்வு நடந்து வருவதாகவும், 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளது என்றும், சிவகாசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நான்கு விபத்துக்கள் ஏற்பட்ட நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.
மேலும், 177 பட்டாசு ஆலை விதிமீறல் கண்டறிந்து உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறியவர் 13-ஆம் தேதிக்கு முன்பே பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதோடு மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் அங்கே ஏற்பட்ட உயிரிழப்புக்கு நிவாரணமாக நம் தலைவர் 4 லட்சம் கொடுத்து துணை நின்றவர் என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் பிரச்சனையை தீர்த்து வைத்த பிறகும் எதிர்க்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதில் அரசியல் புகுத்தப்படுகிறது என்று கூறினார். இதற்கு தங்கம் தென்னரசு போராட்டத்திற்கான காரணத்தை மறுபடியும் விளக்கினார்.