தமிழக செய்திகள்

திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

விபத்தில் ராகுல் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல் (வயது 23). மேள வாத்தியம் வாசித்து வந்தார். இவர் வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு சாலைகிராமத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் கூட்டு ரோடு தீவனூர் சாலை அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி ராகுல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது.

இளைஞர் உயிரிழப்பு

இந்த விபத்தில் ராகுல் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.