தமிழக செய்திகள்

சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏ.. தேர்தல் வியூக வகுப்பாளர் To அமைச்சர் - யார் இந்த கீர்த்தனா?

அண்மையில் பேட்டி ஒன்றில் அவர் ஹிந்தியில் பேசியது கண்டனத்துக்கு உள்ளானது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்கள் வென்ற நிலையில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற சிபிஎம், சிபிஐஎம், காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் விஜய்க்கு ஆளுநர் முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அவருடன் ஆதவ் அர்ஜுனா , புஸ்ஸி ஆனந்த், ராஜ்மோகன், அருண்ராஜ், நிர்மல் குமார், கீர்த்தனா, வெங்கட் நாராயணன் உள்ளதோர் அமைச்சர் பதவியேற்றனர்.

இதில் 29 வாயுதான கீர்த்தனா பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் வயது எம்எல்ஏ இவர். சிவகாசியில் தேர்தெடுப்பட்ட முதல் பெண் எம்எல்ஏவும் இவரே.

விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டகீர்த்தனா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அசோகனை 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

1996ல் விருதுநகரில் பிறந்த கீர்த்தனா, அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டமும், 2019-ல் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

நேரடி அரசியலுக்கு வருவதற்கு முன்பு, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் (I-PAC) நிறுவனத்திலும் 'ஷோ டைம் கன்சல்டிங்' போன்ற நிறுவனங்களில் அரசியல் வியூக வகுப்பாளராகப் பணியாற்றினார்.

அரசியல் வியூக வகுப்பாளராக பணியாற்றிய காலத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு போன்ற முன்னணித் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.

தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளை சரளமாகப் பேசும் திறன் கொண்டவர் கீர்த்தனா. அண்மையில் பேட்டி ஒன்றில் அவர் ஹிந்தியில் பேசியது கண்டனத்துக்கு உள்ளானது. ஆனால் தலைவர் விஜய்யின் கொள்கைகளை அகில இந்திய அளவில் கொண்டு சேர்க்கவே இந்தியில் பேசியதாக அவர் விளக்கம் அளித்தார்.