மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக குறித்தும் அதன் தலைமை குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனங்களுக்கு, தவெக அமைச்சர் ராஜ்மோகன் எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:
‘தோல்வித் தலைவர்’ ஸ்டாலின் எங்களைப் பார்த்து ‘கோமாளிகள்’ என்று நீங்கள் சொல்வதைக் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது. திமுக தலைமையின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி கேள்விகளை எழுப்பியுள்ள ராஜ்மோகன், தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு பொருட்டாகவே நீங்கள் மதிக்கவில்லை என்றால், எங்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்யச் சொல்லி ஊடகங்களுக்கு ஏன் உத்தரவிட்டீர்கள்?
ஊடகங்களுக்குக் கட்டளை இடுவதும், YouTube முகப்புப் படங்களில் (Thumbnails) கூட கட்டுப்பாடுகளை விதிப்பதும் ஏன்? தினந்தோறும் என்ன தலைப்பு எடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டீர்கள்? யூடியூபில் கூட வெற்றித் தலைவரைப் புகழக் கூடாது என்று அடம் பிடித்தீர்கள்? மாதந்தோறும் பேனா மூலம் கருத்துக்கணிப்பு நடத்திப் பயந்தீர்கள்? இதற்குத்தானா SOP (நிலையான வழிகாட்டு நடைமுறைகள்) கொண்டு வந்தீர்கள்?"
மேலும், விளம்பர பாணிகளை கேலி செய்யும் விதமாக, வெற்றித் தலைவர் போல ஆடை உடுத்துவது, வெற்றி தலைவர் ‘ராம்ப் வாக்’ போனால், அதை பார்த்து நீங்கள் ‘பாம்பு வாக்’ போனீர்கள்? வெற்றித் தொண்டன் அன்பாய் துண்டு வீசினால், உ.பி.களி டம் நீங்கள் துண்டால் அடி வாங்கினீர்கள்? என்றும் ராஜ்மோகன் கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு, பிரபல நகைச்சுவை பாணியில், அந்த கரடி பொம்மை என்ன விலை? சார்… அது கண்ணாடி சார்! என்ற உரையாடலையும் மேற்கோள் காட்டி நகைச்சுவையாக விமர்சித்துள்ளார்.
மதுராந்தகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு, அமைச்சர் ராஜ்மோகன் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்துள்ள சம்பவம், தவெக-திமுக ஆதரவாளர்களிடையே சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளதுடன், தேர்தல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.