17வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூன்.18ம் தேதி தொடங்கி, இன்றுடன் நிறைவுப்பெற்றது. முதல் கூட்டத்தொடரின் கடைசிநாளான இன்று முதலமைச்சர் விஜய், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீதான கேள்விகளுக்கு பதிலுரை ஆற்றினார்.
அவரது பதிலுரையைத் தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளை முடிவடைந்தன. இதனைத்தொடர்ந்து சட்டமன்றப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர். நிர்மல்குமார்.
அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நாளை மறுநாள் (ஜுன்.25) காலை எரிசக்தித் துறைக்கு புதிதாக நியமனம் செய்யவுள்ளவர்களுக்கு முதலமைச்சர் பணிநியமன ஆணை வழங்குவார். அதனைத்தொடர்ந்து மின்சாரத் துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். என தெரிவித்தார்.
கடந்த வாரம் நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார்.