தமிழக செய்திகள்

TN Assembly Election: குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..!- எடப்பாடி பழனிசாமி

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுகிறது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கட்சிகள் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

அதன்படி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த நிலையில், வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், இன்று கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அங்கு அவர் பேசியதாவது:-

திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது. அரச குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கொரோனா காலத்தில் ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லை. ஆனாலும் சிறப்பாக செயல்பட்டோம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அம்மா மினி கிளினிக் கொண்டு வரப்படும்.

திமுக ஆட்சியில் தரமற்ற லேப்டாப் கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 1 மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வரப்படவில்லை.

இந்தியாவில் அதிகமான தேசிய விருது பெற்ற அரசு அதிமுக அரசு.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்னதாக, எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 15 நிமிடம் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.