தமிழக செய்திகள்

பாஜகவில் இருந்து விலகி தவெக-வில் இணைந்தார் மாநில ஊடகப் பொறுப்பாளர் விஜயலட்சுமி அரவிந்த்!

பாஜகவில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி, N. ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார்.

தமிழக பாஜகவில் மகளிரணி மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும், மாநில ஊடகப் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்த விஜயலட்சுமி அரவிந்த், நேற்று பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இன்று தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர் N. ஆனந்த் முன்னிலையில் தவெக- வில் இணைத்துள்ளார்.

கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்த விஜயலட்சுமி..

தமிழக பாஜகவின் முன்னணி பெண் முகங்களில் ஒருவராக அறியப்பட்டவர் விஜயலட்சுமி அரவிந்த்.

நேற்று தனது பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் மாநில ஊடகத் தொடர்பு இணைப் பொறுப்பாளர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளையும் ராஜினாமா செய்வதாக அக்கட்சியின் மாநிலத் தலைமைக்கு அதிகாரப்பூர்வக் கடிதம் அனுப்பினார்.

அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் இணைப்பு..

ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் விஜயலட்சுமி அரவிந்த் இன்று தவெக கட்சியில் முறைப்படி இணைத்துள்ளார்.

அவருக்கு தவெக கட்சியின் சால்வை மற்றும் பூங்கொத்து வழங்கி சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விஜயதாரணியை தொடர்ந்து விஜயலட்சுமி..

சமீபகாலமாக மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் தவெக-வில் இணைந்து வருகின்றனர். ஜூன் 13 அன்று பாஜகவில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி தவெக-வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் தற்போது பாஜகவின் ஊடகப் பிரிவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த விஜயலட்சுமி அரவிந்தும் தவெக-வில் இணைந்துள்ளனர்.

பாஜக சாஃப்ரான் கேர்ள்..

மென்பொருள் பொறியாளராகவும், உட்புற வடிவமைப்பாளராகவும் இருந்த விஜயலட்சுமி அரவிந்த், கடந்த மார்ச் 2024 இல் முறைப்படி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நேரத்தில் கட்சியில் இணைந்த அவர், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவின் "தி சாஃப்ரான் கேர்ள்"என்ற அடையாளத்துடன் தீவிரமாகத் தன் கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கினார்.

அவரது தீவிர களப்பணியைப் பாராட்டி, கட்சித் தலைமை அவருக்கு மகளிரணி மாநிலச் செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில ஊடகத் தொடர்பு இணைப் பொறுப்பாளர் ஆகிய முக்கியப் பொறுப்புகளை வழங்கியது.