கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி இடம் பெற்றிருந்தது. அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வருகிற சட்டசபை தேர்தலில் அவர் தி.மு.க. கூட்டணியில் கூடுதல் இடம் வேண்டுமென கேட்டார். ஆனால் கூடுதல் இடங்கள் வழங்காததால் தி.மு.க. கூட்டணியில் இருந்து வேல்முருகன் வெளியேறினார்.
அவர் பண்ருட்டி அல்லது நெய்வேலி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வருகிற தேர்தலில் போட்டியிட போவதில்லை என திடீரென அறிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருப்பதாவது:-
வருகிற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. பண்ருட்டி தொகுதியில் போட்டியிடமாறு கூறினாலும் நான் போட்டியிடமாட்டேன். முன்னணி தலைவர்களை நான் நிறுத்துவேன். வேறு தொகுதி ஒதுக்கினாலும் முன்னணி தலைவர்கள் போட்டியிடுவார்கள். நான் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து கட்சி பணிகளில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.