வெள்ளகோவில் ஒன்றியம், சேனாபதிபாளையம் கிராமம், ராகுபையன்வலசில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் இருந்த கிணற்று நீர் திடீரென நீல நிறமாக மாறியதால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
கிணற்று நீர் நிறம் மாறியதால் பொதுமக்கள் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு, விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவலின் பேரில் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.