அமைச்சர் வன்னி அரசு  
தமிழக செய்திகள்

FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானத்தை வரவேற்கிறோம்- வன்னி அரசு

புதிய சட்டதிருத்த மசோதா மூலம் இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிகம் பாதிக்கப்படும். தொண்டு நிறுவனங்களும் அதன் மூலம் செயல்படும் கல்வி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தான் அதிகம்.

FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானத்தை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த மசோதாவை தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித்தீர்மானத்தை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்தார். தனித்தீர்மானத்தை அமைச்சர் வன்னி அரசு வரவேற்றார். அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது:-

* FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானத்தை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம்.

* நேற்று தான் சிறுபான்மை அமைப்பினருடன் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தோம், இன்று தீர்மானம்.

* கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என விவிலியத்தில் கூறியதை நிஜத்தில் நிறைவேற்றியுள்ளார் முதல்வர்.

* ஆர்எஸ்எஸ் திட்டங்களை கொண்டு வருவைதை தான் பாஜக அரசு வேலையாக வைத்துள்ளது.

* அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக வைப்பது தான் பாஜகவின் வேலை.

* கிறிஸ்தவர்களை குறிவைத்து தான் FCRA திருத்த மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது.

* தொண்டு நிறுவனங்களை முடக்க, சொத்துக்களை அபகரிக்க ஏற்கெனவே 4 முறை பாஜக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது.

* 4 முறை சட்டத்திருத்தம் கொண்டு வந்த பாஜக இப்போது கிறிஸ்தவ அமைப்பை முடக்குவதை நோக்கமாக புதிய சட்டம் கொண்டு வர முயற்சி.

* காலம் காலமாக கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் கிறிஸ்தவ அமைப்புகள் நடைமுறையில் சிறு தவற செய்தால் சொத்தை முடக்குவதா?

* கிறிஸ்தவ அமைப்புகளின் சொத்தை முடக்கி அதனை முழுமையாக விற்கக்கூட அரசுக்கு அனுமதி தருகிறது புதிய சட்டத்திருத்த மசோதா.

* FCRA சட்டத்திருத்தம் மூலம் நாடு முழுவதும் 37 ஆயிரம் அமைப்புகளின் சொத்துக்களை முடக்க பாஜக திட்டம்.

* புதிய சட்டதிருத்த மசோதா மூலம் இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிகம் பாதிக்கப்படும். தொண்டு நிறுவனங்களும் அதன் மூலம் செயல்படும் கல்வி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தான் அதிகம்.

* தமிழ்நாட்டில் உள்ள 6ஆயிரம் தொண்டு நிறுவனங்களில் 2000-க்கு மட்டும் தான் FCRA பதிவு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சொத்துக்களை அபகரிக்க பாஜக காத்திருக்கிறது.

* கிறிஸ்தவ அமைப்புகளின் சொத்தை முடக்கி அதனை முழுமையாக விற்கக்கூட அரசுக்க அனுமதி தருகிறது புதிய சட்டத்திருத்த மசோதா என்றார்.