FCRA மசோதாவுக்கு எதிரான தீர்மானம்: சிபிஐ, அதிமுக ஆதரவு

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பதாக எம்எல்ஏ போஜராஜன் தெரிவித்தார்.
FCRA மசோதா
FCRA மசோதா
Published on

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு சிபிஐ, அதிமுக, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வுக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வந்து உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து, வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த மசோதாவை தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித்தீர்மானத்தை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்தார். தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு தெரிவித்தது.

பாஜக எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பதாக எம்எல்ஏ போஜராஜன் தெரிவித்தார். இதுதொடர்பாக போஜராஜன் பேசுகையில்,

FCRA வேண்டாம் என சொல்லவில்லை. திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியதால் தான் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நல்ல சமூக திட்டங்களுக்காக வரும் பணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு இல்லை, அதனை வரைமுறைப்படுத்துவதே நோக்கம் என்றார்.

ஆதரவு

அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி

FCRA தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும் பணம் முறையாக செலவழிக்கப்படுகிறதா? என கண்காணிக்கவே மசோதா. FCRA பதிவு புதுப்பிக்கப்படவில்லை என்றால் சொத்துகள் அரசின் கட்டுப்பாட்டில் செல்லும் அபாயம் உள்ளது. நேர்மையாக நடத்தப்படும் நிறுவனங்கள் நடைமுறை சிக்கல்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு. தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை கண்காணிக்க வருமான வரித்துறை இருக்கும்போது FCRA எதற்கு? FCRA சட்டமே தேவையற்றது. அதில் சட்டத்திருத்தமும் தேவையற்றது என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com