தமிழக செய்திகள்

அதிமுக பல்வேறு நிலைகளாக சிதறிக்கிடக்கிறது - சரியான தலைமை இல்லாததே அதற்கு காரணம் - வளர்மதி

தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய் கடந்த 40 நாட்களில் சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் இணைப்பு விழா நடைபெற்றது.

அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இணைந்தனர்.

அப்போது, தவெகவில் இணைந்த வளர்மதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

1972-ல் அதிமுக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா இந்த இயக்கத்தை கண்ணும் கருத்துமாக இயக்கி வந்தார். ஆனால் இன்றைய தினம் அதிமுக பல்வேறு நிலைகளாக சிதறிக் கிடக்கிறது. அதற்கு காரணம் சரியான தலைமை இல்லாததே. அதனால் அதிமுகவை விட்டு நாங்கள் வந்து விட்டோம்.

தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய் கடந்த 40 நாட்களில் சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறார். அதைப்பார்த்து நாங்கள் இந்த கட்சியில் சேர வந்துள்ளோம். எங்கள் ஊர் மக்கள் இந்த மாற்றத்தை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறினார்.