தமிழக செய்திகள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்தநாள் - எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

தேசத்திற்குத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவை ஆற்றவும் வாழ்த்துகிறேன்.

இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சராக பணியாற்றி வரும் அமித்ஷாவின் பிறந்நாளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த வாழ்த்து செய்தி குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், நீண்ட ஆயுளுடனும் திகழவும், தேசத்திற்குத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவை ஆற்றவும் வாழ்த்துகிறேன்.

நமது மகத்தான தேசத்தின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கான உங்கள் முயற்சிகளில் உங்களுக்குத் தொடர்ந்து வலிமையும் வெற்றியும் கிடைக்கட்டும்.

என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT