தமிழக செய்திகள்

அனுமதியின்றி போராட்டம் - 500 மருத்துவ ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரின் அனுமதி இன்றி போராட்டத்தில் 500 பேர் மீது எழும்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அறவழியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்ட நிலையில் போலீசார் அனுமதி தராததால் அங்கு திரண்டனர். இதனால் போலீசார் அவர்களை குண்டுகட்டாக கைது செய்து சமூக கூடத்தில் அடைத்து வைத்தனர்.

உழைப்போர் உரிமை இயக்க மாநில தலைவர் பாரதி தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது. இதில் பங்குபெற்ற மருத்துவப் பணியாளர்கள் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் போலீசாரின் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் உட்பட 500 பேர் மீது எழும்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT