தமிழக செய்திகள்

தவெக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகள் தான் - உதயநிதி

விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்த குரலுக்கு முதலமைச்சர் வாய் திறப்பதே இல்லை.

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு பின் இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. இதையடுத்து சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

* தவெக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் எதுவும் புதிதில்லை.

வேளாண் பட்ஜெட்

* தவெக ஆட்சியில் காவிரியில் நீர் வரவில்லை, வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு இல்லை.

* கடந்த 4 மாதமாக விவசாயிகள் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்கும் நிலையில் எந்த புதிய அறிவிப்பும் இல்லை.

* தமிழக வேளாண் பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை.

* திமுக அரசின் திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து அவர்களின் கட்சி பெயரை சேர்த்து புதியதை போல் அறிவித்துள்ளனர்.

* மரபை மீறி பேரவையில் முதலமைச்சருக்கு ஜால்ரா போடுகின்றனர்.

* கடந்த 4 மாதமாக விவசாயிகள் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்கும் நிலையில் எந்த புதிய அறிவிப்பும் இல்லை.

கருப்பு சட்டை

* தவெக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகள் தான்.

* குறுவை சாகுபடி செய்யாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அதை வெளிப்படுத்தவே கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வந்தோம்.

* அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்ற கோரிக்கை குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை.

* விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்த குரலுக்கு முதலமைச்சர் வாய் திறப்பதே இல்லை.

காவிரி விவகாரம்

* காவிரி விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க அனுமதி கோரி சபாநாயகரிடம் திமுக சார்பில் கடிதம் அளித்துள்ளோம்.

* சட்டசபையில் நாளை முதல் நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர் வாய் திறப்பாரா என்று பார்ப்போம்.

* எங்கள் கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிப்பார் என விவசாயிகளுடன் திமுக எம்எல்ஏக்களும் காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.