

தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கால்நடைப் பராமரிப்பு, பால் உற்பத்தி மற்றும் பசுமைப் போர்வையைப் பெருக்கவும் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
500 நடுத்தர பால் பண்ணைகள் அமைக்க 25 சதவீதம் மூலதன மானியம் வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் சிறு பால் பண்ணைகள் அமைப்பதை ஊக்குவிக்க 4 சதவீத வட்டி மானியமாக ரூ.4.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு சார்ந்த கால்நடை பராமரிப்புக்காகச் சிறப்பு நிதியாகத் தலா ரூ.5,000 வழங்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்குக் கால்நடைத் தீவனம் ஒரு கிலோ ரூ.2 என்ற மானிய விலையில் வழங்கப்படும்.
மாநிலத்தில் விதை இருப்பை அதிகரிக்கும் நோக்கில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 150 விதை பயிர் தொகுப்புகள் ஏற்படுத்தப்படும்.
வேளாண் காடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு 5 லட்சம் சந்தன மரங்கள் மற்றும் 50,000 தேக்கு மரங்கள் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் மாநிலம் முழுவதும் மொத்தம் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' மூலம் மாநிலத்தின் காடுகளின் பரப்பளவை அதிகரிக்கவும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணவும் மாநிலம் முழுவதும் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் அமைச்சர் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.