தமிழக செய்திகள்

எம்எல்ஏக்களுக்கு 2 நாள் புத்தாக்க பயிற்சி - முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்

சட்டசபை​யின் முதல் கூட்​டம் ஆளுநர் உரை​யுடன் வரும் ஜூன் 18-ந்தேதி தொடங்​க உள்​ளது.

தமிழக எம்​எல்​ஏக்​களுக்கு 2 நாள் புத்​தாக்​கப் பயிற்சி சென்னையில் வழங்​கப்பட உள்​ளது. இதில் அனை​வரும் பங்​கேற்க வேண்டுமென சபாநாயகர் ஜே.சி.டி.பிர​பாகர் தெரிவித்து இருந்தார்.

தமிழகத்​தில் நடந்​து​ முடிந்த சட்​டசபை தேர்​தலில், தவெக அதிக இடங்​களில் வெற்​றி​பெற்று ஆட்சி அமைத்​துள்​ளது. தற்​போதைய 229 எம்​எல்​ஏக்​களில் சுமார் 145 பேர் புது​முகங்​களாக இருக்​கின்றனர். இதில் தவெக​வில் மட்​டும் 101 பேர் முதல்​முறை​யாக எம்​எல்ஏ ஆகி​ உள்​ளனர்.

சட்டசபை​யின் முதல் கூட்​டம் ஆளுநர் உரை​யுடன் வரும் ஜூன் 18-ந்தேதி தொடங்​க உள்​ளது. அதற்கு முன்​ன​தாக எம்​எல்​ஏக்​களுக்கு சட்​டசபை நடவடிக்​கைகள் குறித்து 2 நாள் பயிற்சி வழங்​கப்பட உள்​ளது.

ஒவ்​வொரு முறை​யும் தேர்​தல் முடிந்து சட்​டசபை கூடு​வதற்கு முன்பாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அனைத்து எம்​எல்​ஏக்​களுக்​கும் புத்தாக்​கப் பயிற்சி வழங்​கப்​படு​வது வழக்​கம்.

அதன்​படி இந்த முறை​யும் 17-வது சட்​டசபைக்கு தேர்​வான அனைத்து எம்​எல்​ஏக்​களுக்​கும் 2 ​நாள் பயிற்சி முகாம் சென்னை கலை​வாணர் அரங்​கத்​தில் இன்றும் நாளையும் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை நடத்​தப்பட உள்​ளது.

சட்டசபை விதிகள், சட்டசபை உறுப்பினர்கள் எப்படி செயல்படுவது உள்ளிட்டவை குறித்து எம்எல்ஏக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். புத்தாக்க பயிற்சியை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்​கிறார்.