விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணியளவில் தமிழக வெற்றிக்கழக மாநாடு தொடங்கியது. தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாநாட்டு திடலில் ராம்ப்-ல் நடந்து சென்ற விஜய்யை நோக்கி தொண்டர்கள் கட்சி துண்டை வீசிய நிலையில், அதனை தனது கழுத்தில் அணிந்த படி விஜய் நடந்து சென்றார்.
இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. வெற்றி வாகை என தொடங்கும் இப்பாடலில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகள் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இப்பாடலை விஜயுடன் இணைந்து தெருக்குரல் அறிவு எழுதி பாடியுள்ளார்.
பின்னர் தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கைகளை கட்சி நிர்வாகிகள் வாசித்தனர். இதனையடுத்து விஜயிடம் பகவத் கீதை, பைபிள் நூல்கள் வழங்கப்பட்டன.
பின்னர் தவெக மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வீர வாள் வழங்கினார்.