தமிழக செய்திகள்

TN Assembly Election| தலைமைச் செயலகத்தில் விஜய்- தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்

தி.மு.க. அரசுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் குறித்து விஜய் புகார் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி வழங்காதது தொடர்பாக புகாரளிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்னை தலைமைச் செயலகம் வந்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து தி.மு.க. அரசுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் குறித்து விஜய் புகார் அளித்துள்ளார். மேலும், பிரசாரத்திற்கு உரிய அனுமதி வழங்கக்கோரி மனு அளித்துள்ளார்.

த.வெ.க. தலைவர் விஜய் வருகையால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.