தமிழக செய்திகள்

த.வெ.க. கல்வி விருது வழங்கும் விழா: மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார் முதலமைச்சர் விஜய்

சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து விருது வழங்கி முதலமைச்சர் விஜய் பாராட்ட உள்ளார்.

தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் ஆண்டுதோறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களை நேரில் அழைத்து விருது வழங்கி பாராட்டி வருகிறார்.

அந்த வகையில், இந்த ஆண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு முதல் கட்டமாக இன்று சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்கின்றனர்

மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் காலை 11 மணிக்கு விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். பின்னர் அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட உள்ளது.

மதியம் 2 மணி அளவில், முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவச்செல்வங்களுக்கு, அவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கி, வாழ்த்தி கவுரவிக்க உள்ளார்.

SCROLL FOR NEXT