தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் அதன் தலைவர் விஜய் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ஆலோசனையில் தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களை ஆட்சியமைக்கும் வரை சென்னையில் தங்க வைக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதனால் மாமல்லபுத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் த.வெ.க. வெற்றி வேட்பாளர்கள் தங்க வைப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் வீடு இருந்தால் அங்கு தங்கிக்கொள்ளலாம் என்று த.வெ.க. தலைமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.