தமிழ்நாட்டில் பெண்களுக்கான வெற்றிப் பயணம் கட்டணமில்லா பேருந்துத் திட்டம் அக்டோபர் 2, 2026 அன்று விரிவாக்கம் செய்யப்பட்டு முதலமைச்சர் விஜயால் தொடங்கி வைக்கப்பட்டது. திட்டத்தின் படி மாநகர, நகர்ப்புற Ordinary, Express, L.S.S., Deluxe, புறநகர் Ordinary மற்றும் மலைப்பகுதி Ordinary சேவைகளில் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்கும் தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும், அவர்களுடன் துணையாளர் ஒருவரையும் அனுமதிக்கக் கோரி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்க அனுமதி மறுத்து அரசாணை வெளியிடாமல் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் தவெக அரசுக்குக் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
பெண்கள் மற்றும் திருநர்களைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் சமூகநலத்துறை அமைச்சர் அறிவித்திருந்தும், இதுவரை உரிய அரசாணை பிறப்பிக்கப்படாததால், பேருந்து நடத்துநர்கள் மாற்றுத்திறனாளிகளைப் பயணிக்க அனுமதி மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
அரசின் அறிவிப்புக்கும் நடைமுறைக்கும் இடையிலான இந்த முரண்பாடு, தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
வெறும் ரீல்ஸ் கன்டென்ட்டுக்காக அவசரகதியில் அறிவிப்புகளை வெளியிடுவதும், அவற்றைச் செயல்படுத்துவதற்கான அரசாணைகளைப் பிறப்பிக்காமல் காலம் தாழ்த்துவதும் தவெக அரசின் வாடிக்கையாகிவிட்டது. இதனால், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதோடு, ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் சீர்கெட்டு வருகிறது.
எனவே, சட்டமன்றத்தில் அறிவித்ததை நிறைவேற்றும் வகையில், வெற்றிப் பயணம் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடன் துணையாளர் ஒருவரும் கட்டணமின்றிப் பயணிக்க அனுமதிக்கும் வகையில் உரிய அரசாணையை உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
என்று தெரிவித்துள்ளார்