திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவில் கொண்டு வரப்பட உள்ள திருத்தங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மத்திய பா.ஜ.க. அரசு தாக்கல் செய்துள்ள திருநங்கைகள் திருத்தச் சட்ட மசோதா திருநங்கைகளின் உரிமையை பறிக்கும்.
பாதுகாப்பு என்ற பெயரில் கொண்டுவந்த மசோதாவை திருநங்கைகளே எதிர்க்கும்போது அதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.
திருநங்கைகளிடம் கருத்துகளை கேட்காமல் சட்டத்திருத்த மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு தாக்கல் செய்துள்ளது.
பாதிக்கப்படுவோரின் கருத்தை கேட்காமல் வலுக்கட்டாயமாக திருத்தங்களை மேற்கொள்ளக்கூடாது.
திருநங்கைகளுடன் கலந்துரையாடி உண்மையான ஒருமித்த கருத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மத்திய பா.ஜ.க. அரசின் புதிய மசோதாவால் திருநங்கைகளின் உரிமைகள் பறிபோகும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.