தங்கம் விலையில் தொடர் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2-ந்தேதி கிராமுக்கு அதிரடியாக ரூ.300 அதிகரித்து ரூ.13 ஆயிரத்து 550-க்கும். சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 400 உயர்ந்து ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 3-ந்தேதி கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13 ஆயிரத்து 700, சவரன் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 600 ஆகவும் விற்பனை ஆனது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.
தங்கம் விலை நேற்று சரிவை சந்தித்தது. கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.13 ஆயிரத்து 560-க்கும், சவரனுக்கு ரூ.1,120 சரிந்து ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.1,07,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.13,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
06-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,480
05-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,600
04-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,600
03-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,600
02-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,400
06-07-2026- ஒரு கிராம் ரூ.250
05-07-2026- ஒரு கிராம் ரூ.260
04-07-2026- ஒரு கிராம் ரூ.260
03-07-2026- ஒரு கிராம் ரூ.260
02-07-2026- ஒரு கிராம் ரூ.255