சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
கடந்த 27-ந்தேதி கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 370-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் குறைந்தது. அதன்படி, ஒருகிராம் தங்கம் ரூ.13,300-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,04,240-க்கும், கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,030-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் காலையில் குறைந்த தங்கம் விலை பிற்பகலில் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
29-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400
28-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960
27-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960
26-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400
25-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,120
29-06-2026- ஒரு கிராம் ரூ.245
28-06-2026- ஒரு கிராம் ரூ.245
27-06-2026- ஒரு கிராம் ரூ.245
26-06-2026- ஒரு கிராம் ரூ.245
25-06-2026- ஒரு கிராம் ரூ.230