தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - சவரன் எவ்வளவு தெரியுமா?

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 20-ந்தேதி கிராமுக்கு ரூ.13,600, சவரனுக்கு ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 800 இருந்த தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகமாக காணப்பட்டது. கடந்த 27-ந்தேதி கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 370-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் குறைந்தது. அதன்படி, ஒருகிராம் தங்கம் ரூ.13,300-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை அதிரடி குறைவு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,04,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

29-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

28-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960

27-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960

26-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

25-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,120

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

29-06-2026- ஒரு கிராம் ரூ.245

28-06-2026- ஒரு கிராம் ரூ.245

27-06-2026- ஒரு கிராம் ரூ.245

26-06-2026- ஒரு கிராம் ரூ.245

25-06-2026- ஒரு கிராம் ரூ.230