தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த 17-ந்தேதியில் இருந்து விலை குறைந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.210-ம், சவரனுக்கு ரூ.1,680-ம் குறைந்து இருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் என்ன விலை குறைந்ததோ? அதே அளவுக்கு நேற்றும் இறங்குமுகத்தில் காணப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 800-க்கும் விற்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.210-ம், சவரனுக்கு ரூ.1.680-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 140-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 120-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
25-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,120
24-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,800
23-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,480
22-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,800
21-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,800
25-06-2026- ஒரு கிராம் ரூ.230
24-06-2026- ஒரு கிராம் ரூ.240
23-06-2026- ஒரு கிராம் ரூ.250
22-06-2026- ஒரு கிராம் ரூ.255
21-06-2026- ஒரு கிராம் ரூ.255