தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை - எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து ரூ.13,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் குறைந்து, பின்னர் அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 16-ந்தேதியில் இருந்து மீண்டும் விலை குறையத் தொடங்கி இருக்கிறது.

நேற்று ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ரூ.1,06,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து ரூ.13,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

23-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,480

22-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,800

21-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,800

20-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,800

19-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,560

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

23-06-2026- ஒரு கிராம் ரூ.250

22-06-2026- ஒரு கிராம் ரூ.255

21-06-2026- ஒரு கிராம் ரூ.255

20-06-2026- ஒரு கிராம் ரூ.255

19-06-2026- ஒரு கிராம் ரூ.255