தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 15-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 70-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது. இது படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 950- க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது. நேற்று ரூ.380 குறைந்து தங்கம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 570-க்கும், ரூ.3 ஆயிரத்து 40 குறைந்து சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 560-க்கும் விற்கப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

19-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,560

18-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

17-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,240

16-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,480

15-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,560

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

19-06-2026- ஒரு கிராம் ரூ.255

18-06-2026- ஒரு கிராம் ரூ.270

17-06-2026- ஒரு கிராம் ரூ.275

16-06-2026- ஒரு கிராம் ரூ.275

15-06-2026- ஒரு கிராம் ரூ.280