தமிழக செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!

முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு நடைப்பெற்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், (குரூப் 2 மற்றும் 2A) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வு முடிவுகளை இன்று (ஜூன் 29) வெளியிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 22 மற்றும் மார்ச் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த முதன்மைத் தேர்வின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைப் பட்டியலைத் தேர்வர்கள் tnpsc.gov.in என்ற இணைய முகவரியில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

600க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ அறிவிப்பு, கடந்த ஆண்டு ஜூலை வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெற்றது. அதற்கான முடிவுகள் டிசம்பர் 22இல் வெளியானது.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு இந்தாண்டு நடைபெற்றது. இந்நிலையில், அதற்கான முடிவுகள் இன்று (ஜூன் 29) வெளியாகியுள்ளது.