முதல்வர் விஜய் காலில் விழுந்தாலும் அனிதா ராதாகிருஷ்ணனை தவெகவில் சேர்க்க மாட்டோம் என மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜயை ஒருமையில் பேசிய புகாரில் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
ராதாகிருஷ்ணனிடம் கிட்டத்தட்ட 5 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. இதன் பின் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய சொல்லி போலீசார் மிரட்டுகின்றனர்’ என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிடி நிர்மல் குமார்,
"அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற கேவலமான ஒருவரை தவெகவில் சேர்க்க மாட்டோம். தவமிருந்தாலும் கூட அவரை போன்ற ரவுடிகளை சேர்க்க மாட்டோம்.
முதல்வர் விஜய் காலில் விழுந்தாலும் அனிதா ராதாகிருஷ்ணனை சேர்க்க மாட்டோம். அவர் பேசியதற்கு வழக்கு போடாமல் இருக்கமுடியாது. முன்ஜாமின் மனு தள்ளுபடியானதால் அவர் கைது செய்யட்டுள்ளார்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அவரை ராஜினாமா செய்ய சொன்னது யார்? என ஆதாரத்துடன் கூற வேண்டும்.
மாற்று கட்சியில் இருந்து தவெக வந்தவர்கள் மீது வழக்கு இருந்தாலும் அதன் விசாரணை தொடரும்.
யார் ஊழல் செய்திருந்தாலும் வழக்கு பதியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என தெரிவித்தார்.