தமிழக செய்திகள்

நீட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதி - முதலமைச்சர் விஜய் மத்திய அரசு குழுவினரிடம் தகவல்

12-ம் வகுப்பு மதிப்பெண்களையே சேர்க்கைக்கான அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது.

முதலமைச்சர் விஜய்

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை நந்தன் நிலேகனி தலைமையிலான மத்திய அரசின் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்ட பணிக் குழுவினர் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின்போது, உயர்கல்விச் சேர்க்கைக்காக நடைபெறும் நீட் அல்லது நீட் போன்ற தேர்வுகள் நடத்தப்படுவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நீட் தேர்வு

அதற்குப் பதிலாக, 12-ம் வகுப்பு மதிப்பெண்களையே சேர்க்கைக்கான அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது.

தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதியன்று நீட் தேர்விற்கு எதிராக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், மருத்துவப் படிப்புகள் மற்றும் பிற உயர்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையில் நீட் மற்றும் நீட் போன்ற தேர்வுகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

SCROLL FOR NEXT