குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து மதிப்புகளை தாக்கல் செய்யும் அரசு ஊழியர்கள் பெயர்கள் தான் பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அசையும், அசையா சொத்துகள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட அனைத்து சொத்து விவரங்களையும் வருகிற 31-ந் தேதிக்குள் தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
வேறு யார் பெயரிலும் அரசு ஊழியர்கள் சொத்துகள் வாங்கியிருந்தாலும் அவற்றையும் குறிப்பிட்டு அந்த நபருக்கும். அரசு ஊழியருக்கும் என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும்.
குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து மதிப்புகளை தாக்கல் செய்யும் அரசு ஊழியர்கள் பெயர்கள் தான் பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெறும்.
சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதவர்கள், அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதியை மீறியதாக கருதப்படுவர்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.