இந்த மாத இறுதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் சலுகை- மாநகராட்சி அறிவிப்பு

முதல் அரையாண்டில் ரூ.1119 கோடி வசூல் ஆனது. நடப்பு ஆண்டுக்கான இலக்கு ரூ.1250 கோடி ஆகும் என்றார்.
சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
Published on: 
Summary

அக்டோபர் மாதத்திற்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள குடியிருப்பு உரிமையாளர்கள் வணிக கட்டிட உரிமையாளர்கள் ஆண்டுக்கு இருமுறை சொத்து வரி செலுத்தி வருகிறார்கள். முதல் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்தும் அவகாசம் செப்டம்பர் மாதத்துடன் முடிந்தது. இரண்டாவது அரையாண்டுக்கான காலம் தொடங்கியுள்ளது.

அக்டோபர் மாதத்திற்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஊக்கத்தொகை

இந்த மாதம் 31-ந் தேதிக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். ரூ.5 ஆயிரத்திற்கு மிகாமல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநகராட்சி வருவாய் அதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நீண்ட காலமாக வராமல் இருக்கும் சொத்து வரி ரூ.300 கோடியாகும். இதில் ரூ.90 கோடிக்கு நீதிமன்ற வழக்கு உள்ளது. அதனால் எந்த மேல் நடவடிக்கையும் தற்போது எடுக்க முடியவில்லை.

நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்க அரசுக்கு தெரிவிக்கவுள்ளோம். அரசின் முடிவை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முதல் அரையாண்டில் ரூ.1119 கோடி வசூல் ஆனது. நடப்பு ஆண்டுக்கான இலக்கு ரூ. 1250 கோடி ஆகும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com