தமிழக செய்திகள்

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு முதலமைச்சர் விஜய் நன்றி

மாநில கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தவர்களுக்கு, நன்றி தெரிவித்து கொண்டார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (22.6.2026) வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், தமிழக கவர்னர், மக்களவை தலைவர், மத்திய மந்திரிகள், சட்டப்பேரவை தலைவர், துணை முதல்-மந்திரிகள், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு , முதலமைச்சர் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களும், முதலமைச்சர் அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்ததோடு, எக்ஸ் வலைதளம் வாயிலாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் ஆகியோர் முதல்-அமைச்சரை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

எக்ஸ் வலைதளம் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முக்கிய பிரமுகர்கள்:

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய ஜல்சக்தித் துறை மந்திரி சி.ஆர். பாட்டீல், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி, மத்திய வேளாண்மை துறை மந்திரி சிவராஜ் சிங் சௌகான், ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரு. சந்தோஷ் குமார் கங்வார், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே; சிக்கிம் மாநில முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங், ஒன்றிய இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே, மத்திய இணை மந்திரி எல். முருகன், மத்திய இணை மந்திரி ஜெயந்த் சிங், ஒடிசா மாநில துணை முதல்-மந்திரி பிரவதி பரிதா, ஆந்திரப் பிரதேச மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், தெலுங்கானா மாநில மந்திரி பொங்குலெட்டி ஸ்ரீனிவாச ரெட்டி, தெலுங்கானா மாநில மந்திரி பொன்னம் பிரபாகர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தலைவருமான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ்; மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, செல்வி ஜோதிமணி, துரை வைகோ, டாக்டர் சையது நசீர் உசேன், திரு. மாணிக்கம் தாகூர், திரு. விஜய் வசந்த், திரு. கதிர் ஆனந்த், திரு. சசிகாந்த் செந்தில்

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி சித்தராமைய்யா, புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரிவி. நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், அரியானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராவ் நரேந்தர் சிங்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆந்திரப் பிரதேச மாநிலத் தலைவர் திருமதி ஒய்.எஸ். ஷர்மிளா, பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திரப் பிரதேச மாநில துணைத் தலைவர் விஷ்ணு வர்தன் ரெட்டி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேசிய செயலாளர் (பொறுப்பு) திரு. நிவேதித் ஆல்வா, பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வானதி சீனிவாசன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் குஷ்பு சுந்தர், ஆந்திரப் பிரதேச மாநில முன்னாள் மந்திரி ரோஜா செல்வமணி, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டாக்டர் டி.ஆர். பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி, We the Leaders இயக்கத்தின் நிறுவனர் திரு. கே. அண்ணாமலை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி வி.கே. சசிகலா, கவிப்பேரரசு வைரமுத்து, திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார், திரைப்பட நடிகர் மம்முட்டி ஆகியோர் எக்ஸ் வலைதளத்தின் வாயிலாக முதல்-அமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் ஆகியோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், மாண்புமிகு சட்டப்பேரவை துணைத் தலைவர் மு. ரவிசங்கர், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்," என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.