பாஜக எம்எல்ஏ தமிழகத்திற்கான நிதியை போராடி பெற்றுத்தரவேண்டும் என குறிப்பிடுங்கள்- சபாநாயகர்
அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு தரவில்லை- வன்னி அரசு
பிரதமரை பாராட்ட வேண்டும் என பா.ஜ.க. எம்எல்ஏ போஜராஜன் கூறுகிறார். இந்த அவைக்கு மாண்பு குறைவாக இருக்கிறதா? என கேட்கிறேன். பிரதமரை பாராட்டுவதன் மூலம் இந்த அவையின் மாண்பை உயர்த்திக்கொள்ள வேண்டும் என கூறுவதா?- அமைச்சர் வன்னி அரசு
முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் வன்னி அரசு
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சி பூ பூப்பது போல் 12 ஆண்டுகளாக பிரதமராக இருக்கிறார் மோடி- பா.ஜ.க. எம்எல்ஏ
என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கு சற்று கூடுதல் முக்கியத்துவம் உள்ளது- பா.ஜ.க. எம்எல்ஏ
சுகாதாரமற்ற குடிநீரால் உடல்நல பிரச்சனைகள், விருத்தாசலத்திற்கு கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வரவேண்டும்- பிரேமலதா
விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்
ஓ.பன்னீர்செல்வத்தை சொன்னதை தொடர்ந்து, அவர் தனது சொந்த அனுபவத்தில் பேசுகிறார் என தங்கம் தென்னரசு கூறியதும் மீண்டும் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.
பிரேமலதாவின் கோரிக்கையை தொடர்ந்து, அண்ணியார் கூறியதுபோல் சட்டசபையில் குடிநீர் பாட்டில்கள் வைத்தால் தூக்கி எறிந்துவிடுவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் பேசியதால் சபையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டசபையில் எம்எல்ஏக்களுக்கு அவரவர் மேஜைகளில் தண்ணீர் டம்ளர்களுக்கு பதில் குடிநீர் பாட்டில்கள் வைக்க வேண்டும்- பிரேமலதா
உரையில் எந்த தலைவர் பெயரையும் தவிர்க்காமல் ஆளுநர் படித்ததே பாராட்டுக்கு உரியது- சபாநாயகர்
தமிழை கற்க நமது ஆளுநர் ஆசைப்படுகிறார் என்பது நான் அவரை சந்தித்தப்போது அறிந்தேன்- சபாநாயகர்
வேறு மாநிலத்தை சேர்ந்த ஆளுநர் தமிழ் பேசுவதை நாம் பாராட்ட வேண்டும்- சபாநாயகர்
ஆளுநர் உரையில் 37 பிழைகள் இருந்தன- பிரேமலதா விஜயகாந்த்
ஆளுநர் உரை ஆளுங்கட்சி உரையாகவே இருந்தது- பிரேமலதா
சட்டசபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் பேசுவதற்கு சமமான வாய்ப்பு தரப்பட வேண்டும்- பிரேமலதா
முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் பிரேமலதா விஜயகாந்த்
சிங்கப்பெண் சிறப்புப்படையால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்காப்படும்- எம்எல்ஏ காமராஜ்
மன்னார்குடி தொகுதிக்கான கோரிக்கைகளை சட்டசபையில் முன்வைத்தார் எம்எல்ஏ காமராஜ்
ஆளுநரே பாராட்டி விட்டார்... இனி வேறு யார் முதலமைச்சரை பாராட்ட வேண்டும்- எம்எல்ஏ காமராஜ்
8-வது முறையாக முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் தெரிவித்த உறுப்பினர் காமராஜ்
காவிரி ஆணையம் கர்நாடகாவின் அறிக்கையை நிராகரிக்காமல் அப்படியே நீர்வளத்துறை ஆணையத்திற்கு அனுப்பியது தவறு. உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி வரைவு திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு சமர்பிக்க சொன்னது தவறு. முன்பு விவசாயிகளுக்காக அணை கட்டுவதாக கூறினர். இப்போது பெங்களூரு குடிநீர் தேவைக்காக என்கிறார்கள். காவிரி நீர் ஆணையம் மீது நம்பிக்கை இழந்துள்ளோம், தற்போது மேகதாது விவகாரம் சட்டசிக்கல் நிறைந்துள்ளதாக மாறியுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவின் அறிக்கையை ஏற்றுவிட்டால் அது பிரச்சனையாகிவிடும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு பதிலாக அணை கட்டுவதற்கு எதிராக புதிய ஆணையம் அமைவது அவசியம். புதிய ஆணையம் அமைய ஓராண்டு வரை காலம் ஆகும். அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு நமக்கும் கொஞ்சம் அவகாசம் கிடைக்கும்- ஆதவ் அர்ஜூனா
மேகதாது மீதான தனித்தீர்மானம் மீது இனி விவாதத்திற்கு இடமில்லை- சபாநாயகர் திட்டவட்டம்
புதிய நடுவர் மன்றம் அமைப்பது கர்நாடகாவுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் பா.ம.விற்கு உள்ளது- பாமக எம்எல்ஏ
புதிய நடுவர் மன்றம் அமைக்கும் தீர்மானத்தை திரும்பப்பெற வேண்டும்- பாமக சார்பில் வேண்டுகோள்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்- எம்.எல்.ஏ.க்கள் உரை தொடங்கியது
மாநிலத்தின் நதிநீர் உரிமையை காப்பதில் தவெக அரசு துளியும் சமரம் செய்யாது என உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன்- அமைச்சர் என்.ஆனந்த்.
எம்எல்ஏக்களுக்கு உரிய மரியாதை தாருங்கள் என்று சபாநாயகர் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர்,"சென்னை திருவிக பள்ளியில் மரபு மீறப்பட்டதாக எம்எல்ஏ பல்லவி மனு அளித்துள்ளார். திருவிக பள்ளியில் நடந்தது இனி நடைபெறாது என நம்புவதால் அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அரசு விழாக்களுக்கு எம்எல்ஏக்களுக்கு முறையாக அழைப்பு விடுத்து அதிகாரிகள், ஆட்சியர்கள் மரியாதை தரவேண்டும்" என்றார்.
மேகதாது அணை விவகாரத்தில் ஆணையம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கோரிக்கை வைத்தார். ஆணையம் என்பதை தவறுதலாக புரிந்து கொண்டார், அதுதொடர்பாக அமைச்சர் தற்போது விளக்கம் அளிப்பார் என்றார் அமைச்சர் ஆதர் அர்ஜூனா.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு
சபை நிகழ்வுகள் நேரலை செய்யப்படுவதால் உறுப்பினர்கள் கவனத்துடன் எச்சரிக்கையாக பேசவேண்டும்- சபாநாயகர் அறிவுரை
சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசக்கூடாது, விவாதத்தின் போது பேசும் உறுப்பினர்கள் Short and Sweet ஆக பேச வேண்டும்- சபாநாயகர்
நீதிமன்ற வழக்குகளை அவையில் பேசக்கூடாது, யாரையும் தனிப்பட்ட விதத்தில் தாக்கி பேசக்கூடாது- சபாநாயகர்
சபையில் உறுப்பினர்கள் பேசுவதற்கு எப்போது அனுமதி தரவேண்டும் என்பது எனக்குத்தெரியும்- சபாநாயகர்
110 விதியின் கீழ் அமைச்சர் பேசிய பின்னர் வேறு யாரும் பேசுவதற்கு அனுமதி கிடையாது- சபாநாயர் திட்டவட்டம்
நேரம் தரும்போது உங்கள் பிரச்சனை, அமைச்சரின் விளக்கத்திற்கு பதில் பேசுங்கள் என சபாநாயகர் வேண்டுகோள்
சபை விதிகளுக்கு உட்பட்டுதான் நடக்கிறேன், அமைதி காக்குமாறும் சபாநாயகர் வேண்டுகோள்
சட்டசபையில் முதலில் பேச அனுமதிக்குமாறு சபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி வாக்குவாதம்
நேரும் தரும்போது உங்கள் பிரச்சனை, அமைச்சரின் விளக்கத்திற்கு பதில் பேசுங்கள் என சபாநாயகர் வேண்டுகோள்
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருடன் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வாக்குவாதம்.
அமைச்சர் விளக்கத்திற்கு முன்பாக தங்களை பேச அனுமதிக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி
அமைச்சர் பர்வேஷ் விளக்கமளிக்கும் நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளில் ஈடுபடுகின்றனர்.
இறால் பதப்படுத்தும் ஆலை அமோனியா கசிவு தொடர்பாக 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் விளக்கம் அளித்து வருகிறார்.
அரசியல் களத்தில் எதிர்கொண்ட பெரும் சோதனைகளை அசாத்திய திறமை, மக்கள் பலத்தால் வென்று காட்டியவர். தமிழக மக்களுக்காக புகழ், வசதியை உதறி தள்ளிவிட்டு மக்கள் சேவைக்காக தன்னை அரிப்பணித்தவர் விஜய்- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
யாருக்கும் அஞ்சாத, தூய்மையான ஆட்சிக்கு சொந்தக்காரர். பணம், புகழை துச்சமென நினைத்து மக்களுக்காக உழைக்க வந்தவர் முதலமைச்சர் விஜய்- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
மறுமலர்ச்சி நாயகனாக செயல்வீரராக தூய்மையான ஆட்சிக்கு சொந்தக்காரான முதலமைச்சர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
அதனை தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.
முதலமைச்சர் சட்டமன்றத்திற்குள் நுழைந்தபோது த.வெ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கைதட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டசபை 2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கம் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது.