தமிழக செய்திகள்

உங்க அப்பாவ காணோம்!' - குட்டிக்கதை மூலம் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!

"நாங்கள் ஏதோ கூட்டத்தில் இருந்து நேரடியாக வந்து இந்த முதலமைச்சர் நாற்காலியில் அமரவில்லை.

சட்டமன்ற அவையில் தவெக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே "டாஸ்மாக் பார்ட்டி ஃபண்ட்" உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் அனல் பறக்கும் விவாதங்களும் அமளிகளும் ஏற்பட்டன. அப்போது அவையைத் தன்வசப்படுத்திய முதலமைச்சர் விஜய், தனது வழக்கமான 'குட்டிக்கதை' பாணியில் எதிர்க்கட்சியினருக்குப் பதிலடி கொடுத்தார்.

முதலமைச்சர் கூறிய குட்டிக்கதை:

ஒரு ஊரில் ஒரு பெரியவர் வெயில் அதிகமாக இருப்பதாகச் சொல்லி, கண்ணுக்கு மேலே கை வைத்துக்கொண்டு எதையோ தேடிக்கொண்டிருந்தாராம்.

அப்போது அருகில் இருந்த சிறுவன் என்ன தேடுகிறீர்கள் என்று கேட்க, அதற்கு அந்தப் பெரியவர், "உன் அப்பா இங்கேயேதான் இருப்பார் என்று சொன்னார்கள், அதான் தேடிக்கொண்டிருக்கிறேன்" என்றாராம்.

நக்கலாகவும், நையாண்டியாகவும் பேச எங்களுக்கும் தெரியும் என்பதைச் சொல்லவே இந்தக் கதையைச் சொன்னதாகக் குறிப்பிட்டார்.

தவெக அரசு எதிர்க்கட்சிகளின் வீணான சலசலப்புகளுக்குப் பதில் தராமல் அமைதி காப்பது பயத்தினால் அல்ல, அது மக்கள் தந்த ஆட்சியைப் பொறுப்புடன் நடத்த வேண்டும் என்ற நிதானம் மட்டுமே காரணம் என்றார்.