தமிழக செய்திகள்

TN Assembly Election | பா.ம.க. தனித்து போட்டியா? கூட்டணியா? - நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று தலைமை நிர்வாக குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

மாலை மலர்

திண்டிவனம்:

பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. இருவரும் தனித்தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். டாக்டர் அன்புமணி அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு மேல்சபை எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் டாக்டர் ராமதாஸ் எந்த அணிக்கு செல்வது என முடிவு எடுக்க முடியாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் புதிதாக கட்சி தொடங்கிய சசிகலா தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். எனவே, டாக்டர் ராமதாஸ் சசிகலா கட்சியுடன் இணைந்து செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கட்சி சின்னம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை மே 10-ந் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ராமதாஸ் என்ன முடிவு எடுப்பது என திணறி வருகிறார். இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று தலைமை நிர்வாக குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது டாக்டர் ராமதாஸ் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். கூட்டத்தின் முடிவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.