தமிழக செய்திகள்

TN Assembly Election | முதன் முதலாக வாக்களிக்கும் 14.59 லட்சம் இளம் வாக்காளர்கள்

ஆண்கள் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர். பெண்கள் 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 7728 பேர்.

தமிழக சட்டசபை தேர்தலில் மொத்தம் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர்.

இதில் ஆண்கள் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர். பெண்கள் 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 7728 பேர்.

இதில் ஆண்களை விட பெண்கள் 12 லட்சத்து 74 ஆயிரத்து 247 பேர் அதிகம்.

இவர்களில் முதன் முதலாக வாக்களிக்கும் உரிமையை 18 வயது முதல் 19 வயது வரை உள்ள 14 லட்சத்து 59 ஆயிரத்து 39 இளம் வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர். இவர்களில் இளைஞர்கள் 7 லட்சத்து 62 ஆயிரத்து 308 பேர், இளம்பெண்கள் 6 லட்சத்து 96 ஆயிரத்து 632 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 99 பேர். இதில் பெண்களை விட ஆண்கள் 65 ஆயிரத்து 676 பேர் அதிகம்.

80 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 62 ஆயிரத்து 752 முதியவர்கள், மூதாட்டிகள் ஓட்டு போடுகிறார்கள்.

இவர்களில் 4 லட்சத்து 87 ஆயிரத்து 536 பேர் ஆண்கள், 5 லட்சத்து 75 ஆயிரத்து 195 பெண்கள், 21 பேர் மூன்றாம் பாலினத்தவர். இதில் ஆண்களை விட பெண்கள் 87 ஆயிரத்து 659 பேர் அதிகம்.