TN Assembly Election | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4-வது கட்ட தேர்தல் பிரசாரம் அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் நான்காம் கட்டமாக தஞ்சாவூரில் பரப்புரையை தொடங்குகிறார்.
 TN Assembly Election | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4-வது கட்ட தேர்தல் பிரசாரம் அறிவிப்பு
Published on

திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.

இந்த தொடர் பிரசாரத்தை மு.க. ஸ்டாலின், கடந்த மார்ச் 31-ந்தேதி திருவாரூரில் தொடங்கிய நிலையில், நான்காம் கட்ட பரப்புரையை ஏப்ரல் 10-ந்தேதி தஞ்சாவூரில் தொடங்குகிறார்.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் நான்காம் கட்டமாக தஞ்சாவூரில் பரப்புரையை தொடங்குகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயண விவரம்:

10.04.2026 (வெள்ளிக்கிழமை)

தஞ்சாவூரில் மாலை 5 மணி (பொதுக்கூட்டம்): திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம்

11.04.2026 (சனிக்கிழமை)

புதுக்கோட்டை மாலை 4 மணி (பொதுக்கூட்டம்) - கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி

திருப்பத்தூர் மாலை 7 மணி (பொதுக்கூட்டம்) - காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை

12.04.2026 (ஞாயிற்றுக்கிழமை)

பரமக்குடி மாலை 4 மணி (பொதுக்கூட்டம்) - பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர்

தூத்துக்குடி மாலை 7 மணி (பொதுக்கூட்டம்) - விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com