நாய்கள் 
தமிழக செய்திகள்

திருவள்ளூரில் தெருக்களில் கூட்டமாக சுற்றும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்

தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திருவள்ளூர் நகராட்சியில் ெமாத்தம் 27 வார்டுகள் உள்ளன. அனைத்து தெருக்களிலும் கடந்த சில மாதங்களாக நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு சரியான உணவு கிடைக்காததால், அவ்வழியாக குழந்தைகள் வாங்கி செல்லும் தின்பண்டங்களை துரத்தி பிடுங்குகிறது. இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

நாய் கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பங்கள் தினந்தோறும் ஏற்பட்டு வருகிறது. பல தெரு நாய்கள் வெறி பிடித்து திரிகின்றன. எனவே திருவள்ளூர் நகராட்சி பகுதியில் தெருக்களில் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்தவும் அதனை பிடிக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.