தோப்பு வெங்கடாசலம் 
தமிழக செய்திகள்

தி.மு.க.வில் இருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம்: வேறு கட்சியில் இணைய திட்டமா?

அதிமுகவில் இருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் தி.மு.க. சார்பில் களமிறங்கிய தோப்பு வெங்கடாசலம் தி.மு.க.வில் இருந்து விலகி உள்ளார்.

சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் மூலம் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

கசப்பான அனுபங்கள்

என் மீது நம்பிக்கை வைத்து மாவட்ட கழக பொறுப்பாளராகவும் பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராகவும் வாய்ப்பு வழங்கினீர்கள். அதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த கோடான கோடி நன்றிகளை அன்புடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் நான் மாவட்ட கழக செயலாளராக செயல்படுவதற்கும் சட்டசபை தேர்தலில் எனக்கும் என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிற காரணத்தால் இனிமேலும் என்னால் கழகத்தில் பயணிக்க என் மனம் இடம் கொடுக்காத காரணத்தால் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் தற்போதைக்கு வேறு எந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை, முயற்சியும் எடுக்கவில்லை. தற்போதைக்கு வேறு கட்சியில் இணையும் மனநிலையில் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

முன்பு, அதிமுகவில் இருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம், திமுக ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.