தமிழக செய்திகள்

இந்தத் தடுமாற்றம் தன்னால் வந்ததல்ல: வேலை செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - வன்னியரசின் பேச்சுக்கு ஆ.ராசா பதிலடி

விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும். பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது.

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா மற்றும் அவரது கணவர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.காவல் துறையின் இந்த கைதி நடவடிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்டபட பல அரசியில் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு அவரது சமூகவலைதள பதிவிட்டிருந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது

அதில் கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால்,மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை நிராகரித்த பார்ப்பனிய அடிமை தான் சீமான்.இப்படி கோட்பாட்டு வழியிலும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம்.

விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும்.பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது.இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை;நாதகவுக்கும் வெட்கமில்லை. என்று பதிவிட்டிருந்தார்.

அமைச்சரின் இந்த கருத்துக்கு எம்பி ஆ ராசா பதிலடி தந்துள்ளார்

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

வேலை செய்கின்ற இடத்தால் விளைந்த நோய்

அரைவேக்காடு களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் தேவையற்ற கைதை கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள்

இந்தத் தடுமாற்றம் தன்னால் வந்ததல்ல;வேலை செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard

என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT