தமிழக செய்திகள்

தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது: திருமாவளவன்

காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தாலும் கூட இறுதி முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் மத்திய அரசிக்கே உள்ளது.

தமிழ்நாடு அரசின் உடன்பாடு, ஒப்புதல், இசைவு இல்லாமல் மேகதாது அணையை கட்டமுடியாது. அதற்கு வாய்ப்பு இல்லை என்று திருமாவளவன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* காவிரி நீர் பிரச்சனை, மேகதாது அணை கட்டும் பிரச்சனை மத்திய அரசிற்கும், இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனை. இரு கட்சிகளுக்கிடையேயான பிரச்சனை இல்லை.

* காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தாலும் கூட இறுதி முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் மத்திய அரசிக்கே உள்ளது. மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆணையம், குழு போன்றவற்றிற்கு உள்ளது. அதைதாண்டி உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது.

* காங்கிரஸ் கட்சி தலைவரிடம் பேசி இதற்கு தீர்வு கண்டுவிட முடியாது.

* காங்கிரஸ் போய் வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் அந்த பிரச்சனை மறுபடியும் தலையெடுக்கும். இது அரசியலுக்காக எழுப்பப்படும் ஒரு பிரச்சனையாக கருத முடிகிறது.

* தமிழ்நாடு அரசின் உடன்பாடு, ஒப்புதல், இசைவு இல்லாமல் அணையை கட்டமுடியாது. அதற்கு வாய்ப்பு இல்லை.

* ஆகவே, ஏதோ காங்கிரஸ் கட்சி நினைத்தால் இதை செய்து விடமுடியும், நிறுத்தி விட முடியும் என்பதை போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் இந்த கோரிக்கைகள் சரியானதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT